இந்த விடுதலை நியாயமா? - பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் கொதிக்கும் காங்கிரஸ்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பேரறிவாளன் விடுதலை.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்குத்தண்டனை 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பேரறிவாளன் விடுதலை செய்ததற்கு பல்வேறு தரப்பிலிருந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களும் எழுதப்பட்டுள்ளது. மேலும் இவர்களை விடுவிப்பதற்கு அரசமைப்புச் சட்டம் 142 உச்சநீதிமன்றம் பயன்படுத்தியது.
பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு மார்ச் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனை தொடர்ந்து தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது இந்த தீர்ப்பில் அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாநில அரசு சார்பில் அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகும் கூட ஆளுநர் இன்னும் முடிவை கிடப்பில் போட்டு அதற்கு காரணம் என்ன? என்பது தெரியாமல் இருப்பதாகவும் பேரறிவாளன் சார்பில் கூறப்பட்டுள்ளது. பிறகு திடீரென உச்ச நீதிமன்றம் அவருக்கு விடுதலை என்று தீர்ப்பு வழங்கியது ஏன்? என்பது குழப்பமாக உள்ளது.
Input & Image courtesy:News