எங்கள் ஆட்சியில் ராமர் கோவில் கட்டுமானம் வேகமாக நடக்கும்: சமாஜ்வாதி தலைவரின் பொய் சூளுரை!

தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில் சமாஜ்வாதி தலைவர் பொய் வாக்குறுதிகளை மக்களிடம் கூறியுள்ளார்.

Update: 2022-02-05 00:54 GMT

பா.ஜ க தலைமையிலான அரசாங்கம் அமைந்த பிறகுதான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் மற்றும் அதற்கான அனைத்து வேலைகளும் தொடங்கப்பட்டன. தற்போது வரை கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இத்தகைய சூழலில் தேர்தல் பிரசாரத்திற்காக பொய்யான வாக்குறுதிகளை உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் கூறுகையில், "நான் முதல்வராக பதவியேற்றால், அயோத்தியில் ராமர் கோயில் விரைவாகவும் சிறப்பாகவும் கட்டப்படும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் புதன்கிழமை ராஜ்யசபாவில் தெரிவித்தார்.


உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூடில் நடைபெற்ற அரசியல் பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கூறிய கருத்துக்கு அவர் பதிலளித்தார். திரு அகிலேஷ் யாதவ் எவ்வளவு முயன்றாலும் ராமர் கோயில் கட்டுவதைத் தடுக்க முடியாது? பாரதிய ஜனதா ஆட்சியில் தான் உத்தரபிரதேசத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒரு சூழ்நிலையில் தற்போது இதற்கு தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் விதமாக, கோவில் கட்டுமானம் என்ற பெயரில் நடக்கும் நிதி முறைகேடுகளை நாங்கள் எதிர்த்தோம். அகிலேஷின் கீழ், கோவில் விரைவாகவும் சிறப்பாகவும் கட்டப்படும். நான் சிவபுராணம் மற்றும் விஷ்ணு புராணம் படித்திருக்கிறேன். ஆனால் இன்று மோடி புராணம் கேட்டேன் என்று ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது திரு. யாதவ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.  


உத்திரப் பிரதேசத்தில் இந்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு, பிராமண சமூகத்திற்கான ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் (BSP) முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை விரைவுபடுத்துவதாக உறுதியளித்தது. ஆனால் அயோத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தேர்தல் திட்டங்களில் ஒன்றாக ராமர் கோயில் பிரசாரம் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy:The Hindu

Tags:    

Similar News