பிரதமர் மோடி தலைமையில் 15 ஆம் தேதி ரத யாத்திரை தொடக்கம்: 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்'

மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' என்னும் ரத யாத்திரையை வரும் 15-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.

Update: 2023-11-11 07:15 GMT

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகம் சேப்பாக்கம் தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகவளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது .மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்று தகவல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து அவர் நிறுவர்களிடம் கூறியதாவது :-


தகவல் ஒளிபரப்பு துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இயங்கிய பத்திரிகை தகவல் அலுவலகம் சேப்பாக்கம் தூர்தர்ஷன் வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வருகிற 15-ஆம் தேதி 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற ரத யாத்திரையை ஜார்க்கண்டில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். யாத்திரையின் போது ஆயுஷ்மான் பாரத் மற்றும் உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகள் சேர்ப்பு ஆதார் சரிபார்ப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.


விவசாயத்தில் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்பாடு குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த யாத்திரை நாடு முழுவதும் 2.5 லட்சம் கிராமங்களிலும் 18000 நகர்ப்புற பகுதிகளிலும் நடைபெறும். தமிழ்நாட்டில் 12,500 கிராமங்கள் 1450 நகர பகுதிகளில் நடக்கும் நவம்பர் 15-ஆம் தேதி தொடங்கும் இந்த யாத்திரை வருகிற ஜனவரி 20ஆம் தேதி நிறைவடையும். இவர் அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News