ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயார்: ஆனால் ஒரு நிபத்தனை விதித்த செலன்ஸ்கி!
உக்ரைன் மீது ரஷ்யா 4வது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை மறுப்பு தெரிவித்த உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரை தொடர அதிபர் விளாடிமிர் புதின் அதிரடியான உத்தரவை பிறப்பித்தார்.
இதனால் உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கீவ் மீது ரஷ்ய படைகள் தாக்கத்தொடங்கியது. அந்த நகரத்தை கைப்பற்றி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி வரும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார். அதன்படி ரஷ்ய பிரதிநிதிகள் பெலாரசில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் உக்ரைன் அதிபர் பெலாரசில் பேச்சு வார்த்தை நடத்தினால் வரமாட்டோம் என்று நிபத்தனை விதித்துள்ளார்.
பெலாரசில் தவிர வேறு எந்த இடத்தில் பேச்சு வார்த்தை நடத்தினாலும் வரத் தயார் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அதிரடியாக கூறியுள்ளார். இந்த பேச்சு வார்த்தையை உலக நாடுகள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது. பேச்சு வார்த்தையை நடத்தி உயிர் சேதங்களை தவிர்த்தால் இரண்டு நாடுகளுக்கும் நன்மையே.
Source: Daily Thanthi
Image Courtesy: Twiter