சென்ட் விளம்பரத்தில் பெண்கள் குறித்த இழிவான கருத்து: உடனடியாக நீக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!
சமீபத்தில் வெளிவந்த சென்ட் விளம்பரத்தில் பெண்கள் குறித்த தவறான கருத்தை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவு.
சமீபத்தில் வெளியான வாசனை திரவிய நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று பெண்களை மிகவும் கேவலமாக சித்தரித்த காரணத்திற்காக அதனை நீக்குமாறு தற்போது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெண்கள் குறித்து இழிவாகவும் பாலியல் வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதாக, எனவே இத்தகைய காரணத்திற்காக அதனை ட்விட்டர், யூ டியூப் ஆகியவற்றில் இருந்து நீக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Layers Shots என்ற வாசனைத் திரவியத்தின் விளம்பரம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியானது.
இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், தற்போது சாட் நிறுவனத்தின் விளம்பரம் மிகவும் அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பாக மிக மோசமான கூட்டு பாலியல் வன்கொடுமை கலாச்சாரத்தை தெளிவாக வளர்க்கிறார்கள். எனவே இதுகுறித்து நிறுவன உரிமையாளர் பொறுப்பேற்க வேண்டும். மேலும் காவல் துறைக்கு நோட்டீஸ் எழுதியதோடு மட்டுமல்லாமல் FIR மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.
இதனை விசாரித்த மத்திய அமைச்சகம் தற்பொழுது சமூக வலை தளமான யூ டியுப் மற்றும் டுவிட்டரில் இருந்து இத்தகைய விளம்பரத்தை நீக்கும்படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவை பிறப்பித்துள்ளது. விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. பின்னர், இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் நடவடிக்கையை தொடர்ந்து அவற்றை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது.
Input & Image courtesy: News 18