₹ 3,000 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்பு என கூறும் இந்து சமய அறநிலையத்துறை - உண்மையா?
இந்து சமய அறநிலைத்துறை தற்போது ரூபாய் 3000 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்களை மீட்டுள்ளது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் போது, அவர் குறிப்பிடுகையில் தமிழகத்தை சேர்ந்த கோவில் நிலத்தின் சொத்துக்கள் பெரும்பாலும் ஆக்கிரமிக்க பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பு என்பது தனியார் நபர்களாலும் ஒரு சில குழுக்களின் முயற்சியினாலும் இத்தகைய ஆக்கிரமிப்பு அரங்கேறி இருக்கின்றது. அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதுவரை ரூபாய் 3000 கோடி மதிப்புள்ள இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என்று அவர் கருத்து தெரிவித்துக் கொள்கிறார்.
மேலும் அக்டோபர் ஐந்தாம் தேதி வள்ளலார் பிறந்த தினம் கொண்டாடப்படுகின்றது. வள்ளலார் பிறந்த நாளை முதல்வர் வள்ளலார் 200 என்ற பெயரில் முப்பெரும் விழாவாக சென்னையில் கொண்டாடப்படும். மேலும் வரலாறுக்கு சர்வதேச மையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
வள்ளலார் பிறந்த தேதியை தைக் கருணை தினமாக அறிவிக்கவும் முதல்வர் வலியுறுத்தினார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கோவில் சொத்துக்களை மீட்பதற்கு ரேவர் கருவிக்கொண்டு சொத்துக்களை அளந்து பார்த்து கோவில் ஆக்கிரமிப்பு ஏதாவது இருந்தால் உடனடியாக அவற்றின் மீட்கும் நடவடிக்கையில் தொடங்கி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy: Dinamalar News