நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய 'கர்பா' பாடல் வெளியீடு!

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய 'கர்பா' பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-10-16 15:00 GMT

நவராத்திரி பண்டிகை தொடங்கியதைத் தொடர்ந்து நவராத்திரி சமயத்தில் குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கர்பா நடனம் ஆடுவது வழக்கம். இதையொட்டி பிரதமர் மோடி 'கர்பா' பாடல் ஒன்று எழுதி உள்ளார். அதை வெளியிட்ட அவர் பாடல் வீடியோவுக்கான லிங்க்கை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் மக்களுக்கு பிரதமர் மோடி நவராத்திரி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-


மங்களகரமான நவராத்திரி பண்டிகை தொடங்கும் நேரத்தில் கடந்த வாரம் நான் எழுதிய கர்பி பாடலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பண்டிகை கால பாடல் அனைவரையும் அரவணைக்கட்டும். இப்பாடலுக்கு குரல் கொடுத்து இசையமைத்த திவ்யா குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமக்கு வலிமை கொடுக்கும் துர்க்கை அம்மன் அனைவருக்கும் மகிழ்ச்சி, வளமை , நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம்  ஆகியவற்றை கொண்டு வரட்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Similar News