துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிக்கை!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட 16 பேர் உட்பட கிராம மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என்று கோரிக்கை.

Update: 2022-11-16 05:46 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 16 பேர் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வருகை தந்தனர். திங்கள் தோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் கலெக்டர் செந்தில்ராஜ் இடம் கோரிக்கை மனுவை கொடுத்த மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர்.


கடந்த நான்கு ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை முடுக்கப்பட்டதால் வேலைவாய்ப்பு இல்லாமல் முடங்கி உள்ளோம். காற்று மாசுபாட்டிற்கும் ஆலையத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. வீட்டில் இருந்தால் வேலை வாய்ப்பு கிடைக்காமல் மக்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். எனவே வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்று மக்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


ஸ்டெர்லைட் நிர்வாகம் படிப்புக்கு உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. உலக நாடுகளில் காப்பர் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் அதைத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மீண்டும் திறக்க வேண்டும். தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் மற்றும் மக்கள் இழந்த பல வாய்ப்பு பெற வேண்டும் என்றால் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy:



Tags:    

Similar News