மக்களுக்கான நலத்திட்டத்தில் தி.மு.க நடத்திய குளறுபடிகள்: 3 பையை 30 பேருக்கு வழங்கியது அம்பலம்!

மக்களுக்கான உதவித் திட்டத்தில் 3 பையை 30 பேருக்கு திரும்பத்திரும்ப வழங்கிய தி.மு.கவின் செயல் அம்பலம்.

Update: 2022-05-25 02:06 GMT

மக்களுக்காக அரசு உதவித் திட்டங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் மாநில அரசுகள் உத்தரவு பங்கு வகிக்கின்றன. ஆனால் மாநில அரசுகளின் கவனக்குறைவு காரணமாக பல்வேறு நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடையாமல் பாதி வழியிலேயே காணாமல் போய்விடுகிறது. அப்படியே மக்களுக்கு வந்தாலும் இடத்தில் அரையும், குறையுமா? மக்களை சென்றடைவது பெரும் வருத்தத்திற்கு உரியது. இல்லையெனில் மக்களை சென்று அடைந்து விட்டதாக புகைப்படம் எடுத்துக்கொண்டு கணக்கில் காட்டில் மக்களிடம் அன்பு திட்டம் பறிக்கப்படுகிறது. இத்தகைய ஒரு சம்பவம் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறி இருக்கிறது. 


அரசு நடத்தும் விழாக்களில் சில குளறுபடிகள் ஏற்படுவதும் வழக்கமாக ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் திரைப்படக் காட்சிகளில் வரும் சம்பவங்கள் போல தத்ரூபமாக நிஜத்திலும் நடக்கின்றன. நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் மேடை நாடகம் இதை நிரூபித்து காட்டு உள்ளது. தி.மு.க தலைமையிலான அரசு சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு போய் சேர்க்கும் நோக்கில் நிகழ்ச்சி விழா ஒன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் உழவர் நல திட்டத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இணையவழி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 


நாமக்கல் மாவட்டம் கார்கூடல்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்காக பொதுமக்கள் அழைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தான் இந்த அரசியல் நாடகம் அரங்கேறி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முடிவில் பல நாடுகளுக்கும் வேளாண் வழங்கப்பட்டது. ஆனால் மூன்று பைகள் மட்டுமே திரும்பத் திரும்ப பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது தொடர்பான வீடியோவை நியூஸ் 18 செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. 

Input & Image courtesy: News 18  

Tags:    

Similar News