இலங்கை போன்று பாகிஸ்தானில் மக்கள் போராட்டம்: அன்னியச் செலாவணி கையிருப்பு காலி?
இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். அதிபர் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. தற்போது அதே போன்ற பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தானும் சந்திக்க இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 291.50 கோடி டாலர் என்கின்ற மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டதாக அந்நாட்டின் ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் கூறியுள்ளது. இதனால் பாகிஸ்தானின் அன்னியச் செலாவணி கையிருப்பு 1205 கோடி டாலர் அளவில் உள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் சீனாவிடம் கடன் பெற்றுள்ளது. அதற்கான வட்டியை செலுத்தாமல் மிகப்பெரிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் விரைவில் சர்வதேச அளவில் பொருளாதார உதவி கோருவதற்கு வாய்ப்பு இருப்பதாக பிஸ்னஸ் ரெக்காடர் செய்திகள் கூறுகின்றது. பாகிஸ்தான் நாட்டின் அன்னியச் செலவாணி கையிப்பானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. கடன் மற்றும் அன்னியச் செலவாணி குறைவு காரணமாக விலைவாசி கடுமையாக உயரக்கூடும் என கூறப்படுகிறது. இதனால் இலங்கை போன்று பாகிஸ்தானில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிரதமர் இம்ரான்கான் பதவிக்கு ஆபத்து வந்துள்ள நிலையில் தற்போது பொருளாதார நெருக்கடியும் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Asianetnews