இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றின் திசைவேகத்தை அளவிட ஆர்.எச்.200 சவுண்டிங் ராக்கெட்- குலசேகரன் பட்டினத்தில் இருந்து விண்ணிற்கு பறக்கிறது!

இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றின் திசைவேகத்தை அளவிட குலசேகரன் பட்டினத்தில் இருந்து சவுண்டிங் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Update: 2024-02-29 02:38 GMT

குலசேகரன்பட்டினம் ஏவு தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார் . இதனை அடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க 'ஆர்.எச்.200' ராக்கெட் இன்று பிற்பகல் 1:30 மணி அளவில் குலசேகரன் பட்டினத்தில் தற்காலிகமாக கான்கிரீட் தளம் மூலம் அமைக்கப்பட உள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரிக்கும் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல் வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 முக்கியமான ராக்கெட் களுக்கு முன்னோடியாக இருந்தது .'ஆர்.எச் 200 சவுண்டிங்' என்று அழைக்கப்படும் சவுண்டிங் ராக்கெட் ஆகும். வளர்ச்சி ராக்கெட்டுகளில் உயிர் வாழ்வு உள்ளிட்ட பல முக்கிய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.


குலசேகரன்பட்டினம் அமைந்துள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் விண்ணில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் காற்றின் திசை வேகம் எவ்வாறு இருக்கிறது என்பதை குறித்த தரவுகளை அறிந்து கொள்வதற்காக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதன் மூலம் பெறப்படும் தரவுகள் கம்ப்யூட்டரில் சேகரிக்கப்பட்டு வரும் காலங்களில் இங்கிருந்து விண்ணில் ஏவப்படும். ராக்கெட்டுகளின் வெற்றிக்கு இந்த தரவுகள் பயனுள்ள வகையில் இருக்கும் .அதில் முக்கியமானவை 'மோனக்ஸ்' என்ற பெயரில் ஆன பருவமழை பரிசோதனை ஆய்வு வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த வகையில் சுமார் 1,545 ஆர்.எச். 200 ராக்கெட்டுகள் ஏவப்பட்டு உள்ளன. இதில் குறிப்பாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்  விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்வெளி இயற்பியல் ஆய்வகத்தின் மூலம் பூமத்திய ரேகை அலை ஆய்வுகளுக்காக 51 ஆர்.எச் .200 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு உள்ளன.


மற்றொரு முக்கியமான திட்டம் 'மிட்டஸ்' மிக்ஸ் என்ற வகை விண்வெளி ஆய்வுக்காக திருவனந்தபுரத்தில் உள்ள  உள்ள தும்பாவில் உள்ள தும்பா பூமத்திய ரேகை ஏவு தளத்திலிருந்து 180 ஆர்.எச் 200 ராக்கட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு உள்ளன. 200 மில்லி மீட்டர் விட்டமும்  3,590 மில்லி மீட்டர் நீளமும் கொண்ட இந்த ராக்கெட் 108 கிலோ எடையும்  12 கிலோ எடையும் கொண்ட கருவிகளை சுமந்து செல்கிறது. ஆய்வுக்கருவுகளை பூமியிலிருந்து 70 km உயரத்தில் நிலைநிறுத்தும் வசதி கொண்டது. காற்று மற்றும் காற்றின் வேகம் தொடர்பான அறிவியல் தகவல்கள் 70 கிலோமீட்டரில் இருந்து 20 கிலோமீட்டர் வரை பெறப்படும் .


மத்திய வளிமண்டல பருவ கால காற்று அலைவுகள் மற்றும் இந்திய கோடை பருவமழையுடன் அதன் தொடர்பு, நீண்ட காலம் நடுத்தர காலம் மற்றும் புதிய கால பூமத்திய ரேகை அலை முறைகளில் அம்சங்கள் மற்றும் பரப்புதல் பருவமழை சுழற்சியின் தாக்கம் ,பருவமழையின் தொடக்கம், வலிமை மற்றும் திரும்பம் பெறுதல் ஆகியவற்றில் மத்திய வளிமண்டல சுழற்சி களின் தாக்கம், வளிமண்டல அலைவுகளின் அட்சரேகை தீர்க்கரேகை மாறுபாட்டின் உலகளாவிய பகுப்பாய்வு, ஓசோன் மற்றும் நீராவி போன்ற சிறு கூறுகளின் பருவகால மாறுபாட்டின் மீது மாறும் விளைவுகள் குறித்த அறிவியல் ஆய்வுகளுக்கு ஆர்.எச்.200 சவுண்டிங் ராக்கெட்டுகள் பயனுள்ள வகையில் இருந்துள்ளன.


இந்த ராக்கெட் விண்ணில் 100 கிலோ மீட்டர் தூரம் சென்று விட்டு மீண்டும் இந்திய பெருங்கடலில் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் செயற்கைக்கோள்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. மாறாக காற்றின் திசை வேகத்தை அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதுடன் செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு முழுமையான ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்படும். அதற்கு ஒரு ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


SOURCE :DAILY THANTHI

Similar News