சிதம்பரத்தை அடுத்து அகமது படேலை தூக்கும் அமலாக்கத்துறை ரூ.5,700 கோடி வங்கி மோசடி! கிலியில் காங்கிரஸ்!

சிதம்பரத்தை அடுத்து அகமது படேலை தூக்கும் அமலாக்கத்துறை ரூ.5,700 கோடி வங்கி மோசடி! கிலியில் காங்கிரஸ்!

Update: 2019-08-30 00:44 GMT

ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பரும், உதவியாளரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அகமது படேலின் மகன், ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் மூலம் வங்கிகளிடம் ரூ .5,700 கோடி வங்கி மோசடி செய்துள்ளதாக ஆதாரங்களுக்குரிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதை அடுத்து அமலாக்க இயக்குநரகம் (இ.டி) விசாரிக்க உள்ளதாகவும், இதற்கான கேள்விப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.ஏ.என்.எஸ்.செய்தி நிறுவனம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.


படேலின் மகன் பைசலுக்கு சென்ற புதன்கிழமை (ஆகஸ்ட் 28) சம்மன் அனுப்பப்பட்டது, ஸ்டெர்லிங் பயோடெக் நிருவனதாரர்களாகிய சேதன் ஜெயந்திலால் சந்தேசரா மற்றும் நிதின் ஜெயந்திலால் சந்தேசரா ஆகியோருடனான தொடர்புகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். அவரிடம் நடைபெறும் விசாரணையின்படி பெறப்படும் அறிக்கை பணமோசடி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


சந்தேசரா சகோதரர்கள் வங்கிகளில் இருந்து மிக அதிக கடன்களை பெறுவதற்காக தங்கள் நிறுவனத்தின் இருப்புநிலை அறிக்கையை மிகவும் அதிகமாக காட்டி, போலி நிதி நிலை அறிக்கைகளை தயாரித்து வங்கிகளை ஏமாற்றியுள்ளதாகவும், இதற்காக ஒரு கிரிமினல் சதித்திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


படேலின் மகன் பைசல் மற்றும் படேலின் மருமகன் ஆகியோர் தங்கள் தந்தையின் செல்வாக்கு மூலம் இந்த ஏமாற்று வேலைகளின் மூலம் பலன் பெரும் வகையில், இரகசியக் குறியீடுகள் வழங்கப்பட்டதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கான பணம் இலஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் சண்டேசரா நிறுவன அதிகாரி ஒருவர்  ஆதாரங்களுடன் தகவல் கூறியுள்ளார்.


இந்த இரகசிய குறியீடுகள் படி "சேத்தான், ககன், சித்திகி, இர்பான் பாய் என இரகசியப்பெயர்களில் அவர்கள் மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும் இர்பானின் குறியீட்டு பெயர் i2 மற்றும் பைசலுக்கு குறியீட்டு பெயர் i1 வழங்கப்பட்டது ”என்றும் அந்த அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். அகமது படேல் மகன் பைசல் மற்றும் அவர்களுடைய ஆட்களுக்கு இரகசிய வழிகளில் பணம் வழங்கும் பணிகளை சந்தேசேரா நிறுவனம் பார்த்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


இந்த மோசடிகள் மூலம் வங்கிகளை ஏமாற்றி பெறப்பட்ட ரூ.5,700 கோடி அகமது படேல் மூலம் மேலிடத்துக்கும் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. விசாரணை முடிவு பெறும் தருவாயில் இதில் முக்கியப் புள்ளிகள் அகப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


https://swarajyamag.com/insta/son-of-sonia-gandhis-close-aide-ahmed-patel-to-be-questioned-by-ed-in-rs-5700-crore-bank-fraud-case


Similar News