அயோத்தி தீர்ப்பு தயாராகும் ஆர்.எஸ்.எஸ்! நவம்பர் மாத நிகழ்ச்சிகள் ரத்து.!

அயோத்தி தீர்ப்பு தயாராகும் ஆர்.எஸ்.எஸ்! நவம்பர் மாத நிகழ்ச்சிகள் ரத்து.!

Update: 2019-10-31 03:43 GMT

அயோத்தி-பாபர் மசூதி வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து வரும் 15 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது , இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .


ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காரியகர்தாக்கள் அனைவரும் வெளியூர் பயணங்களை ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளது .உச்ச நீதிமன்றத்தின்தொடர் விசாரணைக்கு பிறகு அயோத்தி ராமர் கோவில் விவகாரம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரபப்பு அடைந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு 15 அல்லது 20 நாட்களில் வரும் நிலையில் பாது காப்புக்காக நாடு முழுவதும் பந்தோபஸ்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் இந்த மாதம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, தலைவர் மோகன் பாகவத் தலைமையில் ஹரித்துவாரில் நடக்க இருந்த முக்கிய கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


அயோத்தி வழக்கின் தீர்ப்பை இந்துக்கள் மாறட்டும் முஸ்லிம்கள் இடையே எந்தவித அசம்பாவிதம் நடக்க கூடாது என ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுதி கொண்டுள்ளது. அதனால் யாரோ செய்த தவறுக்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது பழி போட்டுவிடக்கூடாது என்பதற்காக நிகழ்ச்சிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் எங்கும் செல்ல கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காரியகர்தாக்கள் மற்றும்அமைப்பினர் அனைவரும் அவர்கள் பொறுப்பு வகிக்கும் இடத்தில் இருக்கவும் சங்கத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை எங்கும் செல்ல கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதகா செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Similar News