RSS ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு வழக்கு: DGP பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்ட வழக்கில் டிஜிபி பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சுப்பிரமணியம், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சேர்ந்த சிவகுமார், அரக்கோணத்தை சேர்ந்த முரளி, தர்மபுரியை சேர்ந்த மூர்த்தி, கோவையை சேர்ந்த சீனிவாசன், குமார் புதுக்கோட்டையைச் சேர்ந்த கணபதி ராஜா உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சென்னை ஹைகோர்ட்டில் தனியாக மனுக்களை தாக்கல் செய்து உள்ளார்கள். குறிப்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
அந்த மனுவில் அவர்கள் சென்னை திண்டுக்கல் அரக்கோணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கூறி உள்துறை செயலாளர் டி.ஜி.பி மற்றும் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் மனு கொடுத்தோம், ஆனால் அந்த மனுக்கள் மீது போலீஸ் அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுவரை முடிவுகளில் அவர்கள் தெரிவிக்கவும் இல்லை.
எனவே அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்கள், இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்க இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்ததும், அப்பொழுது போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு மனுக்கள் மீது வருகின்ற 22 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். இதை எடுத்து இந்த மனுக்களுக்கு உள்துறை செயலர் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனுவை தாக்கல் செய்யும் நீதிமன்றம் தற்போது உத்தரவை பிறப்பித்து உள்ளது.
Input & Image courtesy: News 9