உக்ரைன் நாட்டின் 2வது பெரிய நகரான கார்கிவை கைப்பற்றிய ரஷ்யா!

Update: 2022-02-27 08:01 GMT

உக்ரைன் நேட்டோ படையில் சேர இருந்ததால் அந்நாட்டின் மீது ரஷ்யா படைகள் கடந்த 24ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. இதனால் அங்குள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி வருகிறது. மேலும், உக்ரைனில் உள்ள முக்கிய ராணுவ தளங்கள் மீது ரஷ்ய படைகள் மிக ஆக்ரோஷமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் அண்டை நாடுகளான பெலாரஸ், கிரீமியா தீபகற்பம் உள்ளிட்ட வழித்தடங்களில் சென்று உக்ரைன் மீது தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு முக்கிய நகரங்கள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது.

மேலும், அங்குள்ள இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு வருகிறது. உக்ரைன் நாட்டினர் உயிருக்கு பயந்து மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர். சிலர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று 4வது நாளாக தொடரும் சண்டையில் ரஷ்யா அதிரடியான தாக்குதலை தொடர்ந்துள்ளது. நள்ளிரவு நேரங்களில் கீவ் நகரில் பல இடங்களில் குண்டுகளை வீசி ரஷ்ய படைகள் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கிவ்வை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News