உக்ரைன் உடன் பேச்சு வார்த்தைக்கு தயார்: ரஷ்யாவின் மாற்றத்துக்கு பிரதமர் மோடி காரணமா!

Update: 2022-02-25 12:32 GMT
உக்ரைன் உடன் பேச்சு வார்த்தைக்கு தயார்: ரஷ்யாவின் மாற்றத்துக்கு பிரதமர் மோடி காரணமா!

உக்ரைன் உடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் திடீரென்று அறிவித்திருப்பது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் மீது கடந்த இரண்டு நாட்களாக ரஷ்ய படைகள் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. தங்கள் நாடுக்கு யாருமே உதவ முன்வரவில்லை என்று உக்ரைன் அதிபர் உருக்கமான வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதற்கு இடையில் பிரதமர் மோடி நேற்று இரவு ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசி வாயிலாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார். போரை நிறுத்தி அமைதியான முறையில் தூதரக ரீதியில் பேச்சு வார்த்தையை நடத்துங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். இவரது பேச்சு தற்போது கவனிக்கப்பட வேண்டியுள்ளது. பிரதமர் மோடி ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் பேசிய நிலையில் தற்போது அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பது உலக நாடுகளை கவனிக்க வைத்துள்ளது. பிரதமர் மோடி பேசியதாலேயே போரை நிறுத்த வாய்ப்பு இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: Republic World

Tags:    

Similar News