இந்திய கொடியுடன் பறந்த ரஷ்ய ராக்கெட்: மற்ற நாட்டு கொடிகளை நீக்க உத்தரவிட்ட புடின்!

Update: 2022-03-03 12:14 GMT

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த 8வது நாளாக ஆக்ரோஷமான தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைன் ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. உக்ரைன் நாட்டின் தலைநகரமான கீவ் முழுவதிலும் ரஷ்ய படைகள் சூழ்ந்துகொண்டு உக்கிரமான தாக்குதலை நடத்துவதால் உலக நாடுகள் இந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும், உலக நாடுகள் ரஷ்ய மீது பொருளாதார தடை விதித்தது.

ஆனால் இந்தியா நடுநிலையுடன் செயல்பட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கு எதிராகவும் இல்லாமல் நடுநிலையுடன் செயல்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரஷ்யாவின் மீது பொருளாதார தடை விதிப்பால், விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட்டில் இருந்து உலக நாடுகளின் கொடிகளை அகற்றிவிட்டு, இந்திய கொடியை மட்டும் வைத்து ஏற்றப்பட்டுள்ளது. இது உலகளவில் பேசும் பொருளாக அமைந்துள்ளது. இதன் பின்னணியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருக்கலாம் என பேசப்படுகிறது.

Source, Image Courtesy:Twiter

Tags:    

Similar News