கோவா வந்த ரஷ்ய விமானத்தில் வெடிகுண்டா அவசரமாக தரையிறக்க காரணம் என்ன?

கோவா வந்த ரஷ்ய விமானத்தில் வெடிகுண்டு இருந்த காரணத்தினால் உஸ்பெகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கியது.

Update: 2023-01-23 00:47 GMT

ரஷ்யாவில் இருந்து சுமார் 247 பயணிகளுடன் கோவா வரை இருந்து விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி அந்த ஒரு விமானம் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு திருப்பி விடப்பட்டது. மேலும் அங்கு அவசரமாக தரையெடுக்கப்பட்டு இருந்தது ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து ஒரு சிறப்பு விமானம் கோவாவிற்கு புறப்பட்டு வந்தது. இந்த விமானத்தில் சுமார் 240 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் பயணம் செய்தார்கள்.


நேற்று இந்த விமானம் அதிகாலை 4.15 மணிக்கு விமான கோவா விமான நிலையத்தில் வந்து தரையிறங்க வேண்டும். ஆனால் இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக விமான நிலையத்திற்கு இமெயில் வந்ததும் இதனை கண்டு அதிர்ந்து போன விமான நிலைய நிர்வாகம் உடனே சம்பந்தப்பட்ட நிர்வாக விமானத்தின் விமானிக்கு தகவல் கொடுத்து உள்ளார்கள்.


இதனால் விமானி அந்த விமானத்தை தொடர்ந்து கோவாவை நோக்கி செலுத்தாமல் அவசரமாக திரும்பி உஸ்பெகிஸ்தானில் தரை இறக்கப்பட்டது. இந்த ஒரு நிகழ்ச்சி அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கோவா வந்த ரஷ்ய விமானத்தில் வெடிகுண்டு இருந்த காரணத்தினால் உஸ்பெகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கியது. இதனால் பயணிகள் பயத்தில் இருக்கின்றனர்.

Input & Image courtesy: Thanthi

Tags:    

Similar News