சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்: தேவசம்போர்டு தகவல்!

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்று தேவஸ்தான போர்டு தலைவர் பேட்டி.

Update: 2022-11-06 08:23 GMT

சபரிமலை தரிப்பதற்கு இனி முன்பதிவு கட்டாயம் இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் மற்றும் வழக்கறிஞர் ஆனந்த கோபி கூறுகையில், நாகர்கோயிலில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது மகர விளக்கு கால பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். நவம்பர் 17 ஆம் மாலை நடை திறக்கப்படும். அன்று மாலையில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.


நவம்பர் 17 அதிகாலை முதல் டிசம்பர் 27 வரை நடைதிறந்திருக்கும். மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் சபரிமலை நடை திறக்கப்படும். மகரஜோதி ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறும். ஜனவரி 20 வரை நடை திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தரிசனத்திற்காக ஆன்லைன் புக்கிங் அவசியம் ஆன்லைன் முன்பதிவு தேவசனம் போர்டு வசம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 12 இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஏதாவது ஒன்று வேண்டும் மட்டும் கொண்டு 10 ஸ்பாட் புக்கிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


சபரிமலையிலும் பம்பையிலும் அன்னதானம் வழங்க தேவ தேவசம், ஐயப்ப சேவா சங்கமும் முடிவு எடுத்து இருக்கிறது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு பஸ் விடப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிமிடத்திற்கு ஒரு பஸ் என்ற விகிதம் தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் இருமுடி கட்டுகையில் பிளாஸ்டிக் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பம்பை ஆற்றில் ஆடைகளை விடுவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். பம்பையில் பலி தர்ப்பணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: Asianet News

Tags:    

Similar News