சனிப்பிரதோஷ வழிபாடு மற்றதை விட முக்கியத்துவம் பெறுவது ஏன்?

சனிப்பிரதோஷ வழிபாடு செய்வதன் முக்கியத்துவம்.

Update: 2022-01-22 00:30 GMT

மற்ற பிரதோஷம் வழிபட சனிப்பிரதோஷ முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், சிவ ஆலயத்தில் இந்த வழிபாட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகள் தான் காரணம். ஒருவர் பிற நாட்களில் கோயிலுக்கு செல்வதை விட இந்த சனிப் பிரதோஷ நாட்களில் அவர்கள் மனதில் நினைத்த விஷயங்களை எண்ணி வழிபாடு செய்வதன் மூலமாக எண்ணிய காரியங்களில் எண்ணியவாறு அவர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். முக்கியமாக சிவாலயங்களுக்கு நீங்கள் சென்று வழிபடுவது ஐந்து வருட வழிபாட்டிற்கு சமமாக இந்த ஒரு நாள் வழிபாடும் கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.  


என்ன வகைப்பட்ட தோஷங்கள் ஒருவரை ஆட்டிப் படைத்தாலும், அவர்கள் இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலமாக அந்தப் ஒரு தோஷங்களில் இருந்து விலகுவதாக ஐதீகம் உள்ளது. சாதாரண தினங்களில் ஏற்படும் வழிபாடுகளை விட சனிக்கிழமை பிரதோஷம் செய்யும் வழிபாடு ஆயிரம் மடங்கு நன்மைகளை வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நாள் முழுவதும் விரதம் இருந்து, பால் ஆகாரம் மற்றும் எடுத்துக் கொண்டு, மாலையில் சிவன் கோயில் சென்று வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும்.  


ஆனால் தற்சமயம் கோவில் மூடப்பட்டிரக்கும் ஒரு சூழ்நிலை கட்டடமாக வீட்டிலிருந்து கூட, இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வீட்டில் விளக்கு ஏற்றி சிவன், முருகர், விநாயகர் புகைப்படத்தின் முன்பு அவர்களுடைய மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலமாக இந்த நாளில் சிறப்பு பயன்களை நீங்கள் முழுமையாக அடைய முடியும். மேலும் இந்த வழிபாட்டின் மூலம் பாவங்கள் வாஙகுவதாகவும் கூறப்படுகிறது. 

Input & Image courtesy: Malaimalar




Tags:    

Similar News