உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்த சாந்திநிகேதன் - இந்தியாவின் நீண்ட கால ஆசையை நிறைவேற்றிய 'யுனெஸ்கோ'!
உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ளது மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சாந்தி நிகேதன் பல்கலைக்கழகம்.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள சாந்தி நிகேதன் நமது தேசிய கீதத்தை இயற்றிய புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் இருப்பிடமாக திகழ்ந்தது. அங்குதான் நூறாண்டுகளுக்கு முன்பு அவர் விஸ்வ பாரதி கல்லூரியை தொடங்கினார். அது பின்னாளில் பல்கலைக்கழகமாக மாறியது . வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாந்தி நிகேதன் நகரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இதற்கான அறிவிப்பை யுனெஸ்கோ நேற்று எக்ஸ் தலத்தில் வெளியிட்டது. இந்த கலாச்சார நகரத்தை உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தது. சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச ஆலோசனை அமைப்பு சாந்தி நிகேதனை உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தது .இந்த நிலையில் தற்போது சாந்திநிகேதன் யுனெஸ்கோவின் பெருமைக்குரிய பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
SOURCE :DAILY THANTHI