தமிழ்நாட்டில் பழங்குடியினர் பட்டியல் மாற்றியமைக்கும் மசோதா - மத்திய அரசு கூறுவது என்ன?
தமிழ்நாட்டில் பழங்குடியினர் பட்டியலை மாற்றி அமைக்க மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ததன் நோக்கம் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் பட்டியல் மாற்றி அமைப்பதற்காக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பட்டியலை புதிதாக சாதிகளை சேர்த்து பட்டியலில் மாற்றம் செய்ய கோரிக்கையை முன்வைக்கின்றனர். அதை அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு அவப்பொழுது நாடாளுமன்றத்தில் சில சட்ட திருத்த மசோதாக்களை தாக்கல் செய்து வருகிறது.
சமூகத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியில் மாற்றியமைக்கு அதே மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தற்போது செயல்பட்டு இருக்கிறது. அதை ஒட்டி அரசியல் சட்ட ஆணை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மக்கள் அவையில் பழங்குடியின விவகார அமைச்சர் தாக்கல் செய்து இருக்கிறார்.
குறிப்பாக இந்த பழங்குடியினர் பட்டியலில் மாற்றி அமைப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு புதிய அங்கீகாரத்தை கொடுக்க முடியும் என்று மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டு இருக்கிறது. மாநில அரசுகள் சொல்லும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் படியாக இருப்பின் அவற்றை மத்திய அரசு நிச்சயம் பரிந்துரை செய்யும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Thanthi News