கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைமூலம் வகுப்புகள் நடைபெற்றன.
தற்போது கொரோனா பரவல் கட்டுபாட்டிற்குள் வந்ததால் தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பள்ளிகள் செயல்படும் என பள்ளிகல்விதுறை தெரிவித்தது. இதனை தொடர்ந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 10 வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த பள்ளிகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து அரியலூரில் உள்ள இரண்டு பள்ளிகளில் உள்ள மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதை அடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து அவர்களுடன் இருந்த சக மாணவர்கள் , ஆசிரியர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகள் திறந்த மூன்றாம் நாளே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு நடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது