தீவிர சுய மரியாதை விரும்பியா நீங்கள்..? அப்படியெனில் உங்களுக்கு ஒரு ஆச்சர்ய பரிசுண்டு!

தீவிர சுய மரியாதை விரும்பியா நீங்கள்..? அப்படியெனில் உங்களுக்கு ஒரு ஆச்சர்ய பரிசுண்டு!

Update: 2019-12-07 04:52 GMT

தீவிர சுய மரியாதை விரும்பியா நீங்கள். அப்படியெனில் உங்களுக்கு ஒரு
ஆச்சர்ய பரிசுண்டு. சுய மரியாதையுடன் வாழ எத்தனிப்பவர்களின் வாழ்வில் அவர்களை
அறியாமலேயே ஒரு துணை பொருளும் உடன் வளரும் அது "தனிச்சிறப்பு மிக்க
செயல்வீரராக" மாறுவது.


சுயத்துடன் வாழ முனைந்திருப்பதால் நம் திறன் என்ன? நம் திறனை எந்த
எல்லைவரையும் நீட்டிக்க இயலும்?  என அனைத்து
கேள்விகளுக்கான விடைகளையும் அறிந்திருப்போம்.


தனக்கென உரிய கம்பீரத்துடன் வாழ நினைப்பவர்கள் மாற்றங்களை, வளர்ச்சியை, சவால்களை
விரும்புபவர்களாகவே இருப்பார்கள்.


எனவே இந்த அத்தனை குணாதிசயங்களும் நம்மை எந்த வித ஆர்பாட்டமுமின்றி
இயல்பாகவே,  நம்மை அறியாமலேயே ஓர் உட்சபட்ச செயல்திறன் திக்க
மனிதராக நம்மை உயர்த்தும்.


அசாதாராண சாதனைகளை புரிபவர்கள் வெறும் இலக்கை மட்டுமே வைத்திருப்பவர்
அல்ல. அவர்கள் தீர்க தரிசன பார்வையை கொண்டவர்கள். இவர்களை ஆங்கிலம் "பீக்
பர்ஃபாமர்" என்கிறது.


நீங்கள் உட்சபட்ச செயல்திறனுடன் செயல்படுபவராக (peak performer) இருந்தால் நிச்சயம்
பின்வருவபவைகளை நீங்கள் உரக்க சொல்லலாம்:


என்னை நானே நம்பிக்கையூட்டி கொள்கிறேன். எனக்கென ஒரு தீர்க பார்வையும்
அதையொட்டிய அளவிடக்கூடிய இலக்குகளும் உள்ளன.


நான் யோசிப்பது, உணர்வது, பார்ப்பது என
சகலத்திற்க்கும்  பொறுப்பேற்பேன்.


நான் தேர்வு செய்யும் அனைத்து அனுபவங்களிலிருந்தும் கற்று
கொண்டிருக்கிறேன். நான் சந்திக்கும் ஒவ்வொறு சூழலிலும் உயர்விற்க்கான வாய்ப்பை
தேடி அடைகிறேன்


என்னோடு இணைந்து இயங்குபவர் அனைவருக்கும் உதவுகிறேன், அனைவரையும்
ஊக்கப்படுத்துகிறேன். அவர்களின் உயர்வையும் உறுதி செய்கிறேன்.


என் தவறுகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன். தடைகளை சந்திக்கையில் சரியான
பாதையில் செல்வதை உறுதி செய்து கொண்டு தொடர்ந்து முன்னேறி நடக்கிறேன்.


மாற்றங்களை எதிர்பார்கிறேன், வரவேற்க்கிறேன்.


எனக்கு தவறுகள் நேர்ந்துவிடும் என்பதில் துளியும் பயமில்லை.


நான் ஓர் தொடர் மாணவ, எப்போது கற்றலுக்காக தயாரகவே இருக்கிறேன். ஏனெனில் வாழ்க்கை என்பது தொடர்
முயற்சி மற்றும் கற்றலால ஆனது என்பதை அறிந்திருக்கிறேன்.


நான் நிதர்சனத்தை ஏற்கிறேன் அது இன்பமாக இருந்தாலும் சரி துன்பமாக
இருந்தாலும் சரி.


ஒரு போதும் நேர்ந்த தவறுக்கு மற்றவரை குறை கூற மாட்டேன்


என்னை ஒரு போதும் மற்றவர்களை விட உயர்வானவன் என நிருபிக்க போராட
மாட்டேன். என் செயல்கள் என் திறனை பறை சாற்றும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.


Similar News