தென் பகுதி நாட்டின் உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் நிறைவுரை!

உலகின் தென்பகுதி நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டில் பிரதமரின் நிறைவுரை.

Update: 2023-01-16 01:18 GMT

உலகின் தென்பகுதி நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் அப்பொழுது அவர் கூறுகையில், "உண்மையிலேயே பயனுள்ள கருத்துக்கள் மற்றும் யோசனைகளின் பரிமாற்றமாக உள்ளது. உலகம் எதிர்கொள்ளும் பல முக்கியமான பிரச்சினைகளில், வளரும் நாடுகள் ஒரே மாதிரியான முன்னோக்குகளைக் கொண்டுள்ளன என்பது தெளிவாகிறது.


சுகாதாரத் துறையில், பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்துதல், சுகாதாரப் பாதுகாப்புக்கான பிராந்திய மையங்களை உருவாக்குதல், சுகாதார நிபுணர்களின் பணிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நாம் ஒற்றுமையான கருத்துக்களை கொண்டுள்ளோம். டிஜிட்டல் சுகாதார தீர்வுகளை விரைவாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நாம் அறிந்திருக்கிறோம். கல்வித் துறையில், தொழில் பயிற்சி மற்றும் தொலைதூரக் கல்வியை வழங்குவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில், குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் நமது சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் அனைவரும் பயனடையலாம்.


வங்கி மற்றும் நிதித் துறையில், டிஜிட்டல் பொதுப் பொருட்களைப் பயன்படுத்துதல், வளரும் நாடுகளில் நிதி உள்ளடக்கத்தை அதிக அளவில் மற்றும் வேகத்தில் அதிகரிக்க முடியும். இந்தியாவின் சொந்த அனுபவம் இதை நிரூபித்துள்ளது. இணைப்பு உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை நாம் பல்வகைப்படுத்த வேண்டும், மேலும் வளரும் நாடுகளை இந்த மதிப்புச் சங்கிலிகளுடன் இணைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். வளர்ந்த நாடுகள் பருவநிலை நிதி மற்றும் தொழில்நுட்பம் மீதான தங்கள் கடமைகளை நிறைவேற்றவில்லை என்று நம்புவதில் வளரும் நாடுகள் ஒன்றுபட்டுள்ளன. இதுவே இந்தியாவின் 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' அல்லது லைஃப் முன்முயற்சியின் பின்னணியில் உள்ள மையத் தத்துவம்" என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறினார்.

Input & Image courtesy: PIB News

Tags:    

Similar News