சீனா கை வைக்காத இடமே இல்ல போல.. இனி நாடு முழுக்க காதல் செய்யலாம் - மக்கள் தொகையை அதிரிக்க இப்படியும் ஒரு முயற்சியா?

Single women living in China can take leave from work to find love

Update: 2021-10-22 01:30 GMT

சீன மக்கள் தொகை வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக, அடுத்த 50 ஆண்டுகளில், அந்நாட்டு மக்கள் தொகை 140 மில்லியனிலிருந்து 120 மில்லியனாக குறையும். இந்தக் கவலையின் காரணமாக, அலுவலகங்களில் பெண்களுக்கு காதல் விடுப்பு வழங்க அரசாங்கம் திட்டமிட்டது.

பெண்கள் திருமண பந்தத்தில் இணைந்து குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே காதல் விடுப்பு அளிக்கப்படுவதின் நோக்கமாகும். கடந்த சில ஆண்டுகளில், சீனாவில் திருமணமாகாமல் தனியாக இருக்கும் போக்கு வேகமாக அதிகரித்து வருகிறது.

மக்கள் திருமணங்களை சுமையாக கருதத் தொடங்கினர். அத்தகைய சூழ்நிலையில், இப்போது அங்குள்ள அரசாங்கமும் மக்கள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற வேண்டும் என்று விரும்புகிறது. அதனால்தான் பெண்களுக்கு உண்மையான அன்பைக் கண்டறிய விடுமுறை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அலுவலகங்களில் காதல் விடுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற வசதி உள்ளது. விடுப்பு வேண்டும் என்றால் பெண் ஊழியர் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும். அவரது வயது சுமார் 30 க்குள் இருக்க வேண்டும்.

சீனாவில் சீரழிந்து வரும் சமூக அமைப்பு, பெரிய பிரச்சனையாகி வருகிறது. திருமணம் போன்ற உறவில் இளம் பெண்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். அதே நேரத்தில் அரசாங்கம் இளம் பெண்களை திருமணம் செய்ய இதுபோன்ற திட்டங்களை அறிவித்து ஊக்குவிக்கிறது. நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள சிங்கிள் பெண்கள் விடுமுறை எடுக்க தகுதியானவர்கள். இந்த விடுமுறைகள் லவ்-லீவ் என்று அழைக்கப்படுகின்றது.








Tags:    

Similar News