SIR கூட்டத்தை புறக்கணித்த சேகர்பாபு!! உண்மையில் இதுதான் காரணமா??

By :  G Pradeep
Update: 2025-11-15 08:48 GMT

ஆ.ராசாவுக்கும் சேகர்பாபுவுக்கும் இடையில் தலைநகர் தொகுதியில் தனி தொகுதி யாருக்கு வழங்க வேண்டும் என்பது குறித்த முரண்பாடு ஏற்பட்டதாகவும், ஆ.ராசாவைப் அமைச்சர் மரியாதை குறைவாக பேசியதாகவும் சில பிரச்சனைகள் இருந்தது. அதன் பிறகு இருவரும் நேரில் சந்தித்து சமாதானம் ஆகிக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தற்பொழுது ஆ.ராசா தலைமையில் நடந்த SIR குறித்த முக்கியமான கூட்டத்தில் சேகர்பாபு பங்கு பெறவில்லை. 

அதாவது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி SIR தொடர்பான பணிகளை முழுமையாக முடிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் மற்றும் கழகத் தலைவரான ஆ. ராசா தலைமையில் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி தியாகராய நகரில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது. அதில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சேகர்பாபு கூட்டத்திற்கு வருவதாக கூறிவிட்டு கடைசி வரை கலந்து கொள்ளவில்லை. 

இதைத்தொடர்ந்து அக்கட்சியில் இருக்கும் சிலர் முதல்வர் சிறப்பு கூட்டத்தை நடத்துவதற்கு ஆணையிட்டிருந்த நிலையில் ஆ.ராசா தலைமையில் நடப்பதனால் சேகர்பாபு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து உள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் நடந்தவற்றை அடிமட்ட நிர்வாகிகள் வரை எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் பொழுது இதற்காக சேகர்பாபு கலந்து கொள்ளவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Tags:    

Similar News