ஜெர்மனியில் பிரதமர் ஏஞ்சலி மெர்கல் கட்சி தோல்வி!
ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனிடையே அங்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் கடந்த 26ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏஞ்சல் மெர்கல் போட்டியிடவில்லை.

அவருக்கு பதிலாக ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் சார்பில் ஆர்மின் லஷெட் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மத்திய இடதுசாரி கட்சியான ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் ஒலாப் ஷோல்ட்ஸ் போட்டியிட்டார்.
இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் நேற்று காலை வரத்தொடங்கியது. அதில் ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சி 16 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
தற்போதுவரை வெளியான முடிவுகளின்படி ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சி 29.5 சதவீத வாக்குகளும், ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 24.1 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy:Spotlight Nepal