சில சமயம் போலீஸ்காரனாக மாற வேண்டி உள்ளது- அண்ணாமலை ஆவேசம்!

சில சமயம் போலீஸ்காரனாக மாற வேண்டி உள்ளதாகவும் அங்கு பொறுமையாக பேசினால் எதுவும் நடக்காது என்றும் அண்ணாமலை ஆவேசமாக கூறினார்.

Update: 2024-04-08 18:30 GMT

கோவையில் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .சில நேரங்களில் அவர் ஆவேசமாக பேசுகிறார். அவரது நிகழ்ச்சியில் செய்தி சேகரிப்புக்காக முந்தி சென்ற டிவி ஊழியர்களை கடுமையாக எச்சரித்தார். இந்த நிலையில் ஓரிடத்தில் பேசுகையில் மீண்டும் போலீஸ்காரனாக மாற வேண்டி உள்ளதாக ஆவேசமாக குறிப்பிட்டார்.

'உங்களுக்கு நான் ஒரு உத்தரவாதம் தர விரும்புகிறேன். பல்லடம் உட்பட கோவை மக்கள் தொகுதி முழுக்க ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு கஞ்சா விற்பனை செய்யும் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். கோவை எல்லையில் கஞ்சா விற்பனை செய்யும் ஒரு ஆள் கூட இருக்க மாட்டார்கள். இதை உத்திரவாதம் ஆகவே எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி கஞ்சா விற்பனை செய்பவன் யாராவது இருந்தால் என்னை சட்டையை பிடித்துக் கேளுங்கள்.

சில இடங்களில் காவல்துறை அதிகாரியாக மாற வேண்டிய கட்டாயம் இருக்கு .அங்கெல்லாம் பொறுமையாக பேசினால் வேலை நடக்காது. யூனிபார்ம் போடவில்லை என்றாலும் கூட நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். கஞ்சா விற்பனை செய்யும் ஒருவன் கூட இருக்க மாட்டான். நீங்கள் அடுத்த தலைமுறை பற்றி சிந்தித்து வாக்களிக்க வேண்டும்'. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


SOURCE :Dinaseithi

Similar News