திருக்கடையூர்: 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம்!
திருக்கடையூர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம்.;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இத்தலத்தில் 60, 70, 80, 90, 100 ஆகிய வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது செய்தி. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் இருபத்தைந்தாவது குருமகாசந்நிதானம் ஆட்சி காலத்தில் 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
25 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கும்பாபிஷேகம் கோலாகலமாக இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை -தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது.
அட்ட வீரட்ட தலங்களில் ஒன்று. இது சிவத்துக்கு மட்டுமல்ல சக்திக்கும் உரிய தலம். முதன் முதலில் சங்காபிஷேகம் ஏற்பட்ட தலமும் இதுதான். இங்குள்ள ஈசனுக்கு அமிர்தலிங்கேஸ்வரர், அமுதகடோற்பவர், அமுத கடேசர், அமிர்தேஸ்வரர் ஆகிய திருப்பெயர்கள் உண்டு. தேவாரத் தலங்களுள், காவிரி தென்கரைத் தலம். காலனை சம்ஹாரம் செய்த தலம். இப்படிப் பட்ட சிறப்புகள் உடைய திருக்கடையூர் தலத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருக்கடையூர் கும்பாபிஷேகம் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
Input & Image courtesy: Vikatan News