பிரதமரின் காஷ்மீர் பயணம் பற்றி பேச பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை - இந்திய வெளியுறவுத்துறை சீற்றம் ஏன்?
பிரதமர் மோடி பற்றி பாகிஸ்தானின் விமர்சனத்திற்கு, ஜம்மு காஷ்மீரில் என்ன நடைபெறுகிறது என்று பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு உரிமையில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பதிலடி அளித்துள்ளார்.
பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீர் சென்றிருந்தார். அப்போது கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பின்னர் அங்கு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனையடுத்து பிரதமர் மோடியின் ஜம்மு காஷ்மீர் பயணம் பற்றி பாகிஸ்தான் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், ஜம்முவில் உள்ள மக்களை வலுவிழக்கச் செய்வதற்காக பாஜக அரசு பல்வேறு வேலைகளை செய்கிறது என்ற விமர்சனத்தை முன்வைத்திருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் ஜம்மு காஷ்மீர் பயணம் பற்றி பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு உரிமையில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்ச செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பதிலடி கொடுத்துள்ளார். ஜம்முவில் என்ன நடைபெறுகிறது என்று பேசுவறத்கு அவர்களுக்கு உரிமையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Vikatan