57 கோடி இல்லை என்பதால் கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவிர்க்கும் இலங்கை அரசு - நிலைமை படு மோசம்
கொழும்பு அருகில் மூன்று வாரங்களாக கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன 57 கோடி இல்லாமல் கச்சா எண்ணெயை வாங்காமல் தவிர்க்கும் இலங்கை.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலவாணி பற்றாக்குறையால் அதிக பொருட்களை வாங்க முடியவில்லை. இதனிடையே 99 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் ஏற்றுக்கொண்டு ஒரு கப்பல் இலங்கை நோக்கி வந்தது..20ஆம் தேதி இலங்கை கடல் எல்லைக்குள் வந்தது. கொழும்பு துறைமுகம் அருகே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த கச்சா எண்ணெயை பெற வேண்டுமா? எழுவது லட்சம் டாலர் அதாவது 57 கோடி செலுத்த வேண்டும்.
ஆனால் அவ்வளவு டாலர் இல்லாததால் இலங்கை வாங்க முடியவில்லை. அதனால் கடந்த மூன்று வாரங்களாக அக்கப்பல் அங்கையே நின்று கொண்டு இருக்கிறது. அந்த கப்பலுக்கு தாமத கட்டணமாக நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் டாலர் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இலங்கை மிகப்பெரிய மனித பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐக்கிய நாட்டு சபை குழு தெரிவித்தது இருந்தது.
இதற்கிடையில் இலங்கை சுற்றுலா துறையை வளர்ச்சி அடைய செய்ய உதவுவதாக இந்திய பயண முகவர்கள் சங்கம் உறுதி அளித்தது. அதன் தலைவர் ஜோதி மையால் கூறுகையில், இலங்கை பார்க்க வேண்டிய நாடு. சில மாதங்களாக எண்ணற்ற சவால்களை சந்தித்து வரும் இலங்கைக்கு உதவுவது அவசியம் என்று கருதுகிறோம். செலவழிக்கும் பணத்துக்கும் மதிப்பு உடையது. இந்தியாவின் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நாடு. எனவே இலங்கையின் சுற்றுலா வளர்ச்சியை நோக்கி செல்ல உதவும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: News