உணவு பொருட்களுக்கு பஞ்சம்: கோத்தபய பதவி விலக வலுக்கும் இலங்கை மக்கள் போராட்டம்!

Update: 2022-04-20 01:25 GMT

இலங்கையில் இதுவரையில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் அந்நாட்டு அதிபருக்கு எதிராக பொதுமக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போன்று இன்றும் (ஏப்ரல் 19) அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிபர் கோத்தபய உடனடியாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் ஆளும் அரசுக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும், எதிர்க்கும் அனைத்து பொதுமக்களையும் தீவிரவாதிகள் என்று கோத்தபய கூறியதால் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். பலரை கைது செய்திருப்பதாக என்.யு.எஸ். பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இந்த போராட்டத்தில் விவசாயிகள், மாணவர்கள், நீதிபதிகள் என்று பலரும் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான கோஷங்களை முன்வைத்தனர். விரைவில் இலங்கையில் போராட்டம் தீவிரமடையும் என்று சர்வதேச ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

Source: Maalaimalar

Image Courtesy:NDTV

Tags:    

Similar News