"தாலிபான் ஆட்சி என்பது ஜிகாதி தீவிரவாத மையமாக மாறும் "எச்சரிக்கை செய்யும் இலங்கை முன்னாள் பிரதமர் விக்ரமசிங்கே !
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேற்றத்துக்கு பின்னர் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதனால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்தார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளின் தலைமையிலான அரசை இலங்கை அங்கீகரித்தால் தீவிரவாதத்துக்கு உதவுவதற்கு சமம், எனவே அங்கீகரிக்கக் கூடாது என்று இலங்கை முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேற்றத்துக்கு பின்னர் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதனால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்தார்.
இதன் காரணமாக ஆப்கானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அமைய உள்ளது. இதில் ஆப்கன் அதிபராக தாலிபான் இயக்கத் தலைவர் வருவரா அல்லது கடந்த 1995ம் ஆண்டில் இருந்தது போன்று நிர்வாகக் குழு அமைத்து ஆட்சி செய்வார்களா என தெரியவில்லை.
இந்நிலையில், இலங்கை முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி என்பது ஜிகாதி தீவிரவாத குழுக்களின் மையப்புள்ளியாக மாறிவிடும் என்று உலக நாடுகள் அச்சத்தில் உள்ளது.
மக்களுக்கும் நாட்டிற்கும் தாலிபான்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இதனை யாரும் கண்டிக்கவில்லை. புனித குரனை தவறாக புரிந்து கொண்டு செயல்படும் தாலிபான்களால் மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தாலிபான்களின் அரசை அங்கீகரிக்க எவ்விதமான காரணமும் இல்லை. ஆப்கான் அரசுடன் வைத்துள்ள உறவுகளை உடனடியாக இல்ஙகை அரசு துண்டித்து தூதரக அதிகாரிகளை திரும்பபெற வேண்டும். மேலும், ஆப்கானில் தாலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Source: The Hindu
Image Courtesy: The Indian Express