தூத்துக்குடி: கோவில் திருவிழாவிற்கு பக்தர்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறதா நிர்வாகம்?

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் திருவிழாவிற்கு பக்தர்களின் பணத்தை உபயமாக கேட்கும் செயல் அலுவலர்.

Update: 2022-04-11 01:55 GMT

பொதுவாக கோவில் திருவிழாக்கள் என்றால் பக்தர்களிடமிருந்து கோவில் நிர்வாகம் இந்த ஒரு பொருளையும் உபயமாக கேட்காது. குறிப்பாக பக்தர்கள் தான் தானாக முன்வந்து கோவிலுக்கு தன்னால் இந்த பொருள் உதவிகளையும் அல்லது பண உதவிகளையும் உபயமாக தருவார்கள் இதைத்தான் நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் தற்பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் வெங்கடாஜலபதி கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தக் கோவிலின் செயல் அலுவலர் கோவிலுக்கு வெளியில் சிறந்த பேனர்கள் மூலமாக பக்தர்கள் தங்களுக்கு உபயமாக மேற்கண்ட உதவிகளையும் வழங்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 


அதுவும் உதவிகளை நேரடியாக வாங்காமல் பணமாக வாங்கினால் கணக்கு காட்டவேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ? தெரியவில்லை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துமாறு உபயதாரர்களுக்கு அறிவுரை செலுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த வங்கிக் கணக்கில் IFSC நம்பரும் மேலும் வெங்கடாசலபதி என்ற பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. வெங்கடாசலபதி கோவில் என்று பெயர் கூட அங்கு இடம் பெறவில்லை. எனவே கணக்கு வைத்திருப்பது சுவாமியின் பெயரிலா? அல்லது தனிநபர் பெயரிலா? என்பதும் மர்மமாக தான் உள்ளது. 



அதுவும் ₹ 100, ₹ 200 கிடையாது ஆரம்பமே ₹. 10 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் வரை மக்களிடமிருந்து குறிப்பாக கேட்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவிற்கு எவ்வளவு செலவாகும் குறிப்பாக பந்தர் போடுவதில் இருந்து சீர்பாதம் மற்றும் இதர செலவினங்கள் அனைத்தும் உபயதாரர்கள் இடமிருந்து மட்டுமே கேட்கப் பட்டுள்ளது. இத்தகைய செலவுகள் ஏற்கனவே உள்ளூர் மற்றும் தொண்டு நிறுவனங்களால் செலுத்தப் பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கோவில் திருவிழாவிற்கு பணத்தை கொடுக்கவில்லை என்பது உண்மையா? அல்லது நிர்வாகம் அவற்றை அபகரிக்க பார்க்கிறதா? என்பது தொடர்பான கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. 

Input & Image courtesy: Twitter resource

Tags:    

Similar News