ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு: கண் குளிர பெருமாளை தரிசனம் செய்த பக்தர்கள்!

ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பெருமாள் பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.

Update: 2023-01-02 11:54 GMT

பூலோக வைகுண்டமாகவும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்களை பெற்று வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதேசி என்பது சிறப்பு வாய்ந்த ஒரு பண்டிகையாகும். குறிப்பாக இங்கு பகல் 10, இராபத்து இயல்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சந்திப்பார்.


பகல் பத்து உற்சவத்தின் போது பெருமாள் அர்ஜுன மண்டபத்திலும், இராப் பத்து உற்சவத்தின் போது திருமா மணிமண்டபம் எனப்படும் ஆயிரம் கால் மண்டபத்திலும் பக்தர்களுக்காக எழுந்தருளி சேவை செய்வார். இதில் தமிழகத்தின் மட்டுமின்றி பல வெளி மாநில பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று வைகுண்ட ஏகாதேசி திருவிழா கடந்த 23ஆம் தேதி பகல் 10 உற்சவத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பெருமாள் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது.


முன்னதாக 3.30 மணிக்கு நம் பெருமாள் கிளிமாலை மற்றும் திருவம்பார்கள் அணிந்து புறப்பட்டார். பின்னர் கொடி மரத்தை வழியாக சொர்க்க வாசலை வந்தடைந்தால் சரியாக 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பலத்த கோஷத்துடன் சொர்க்க வாசலை கண்டார்கள். இன்று 4.45 மணி முதல் இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News