ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் 819 ஏக்கர் - நில அளவீடு தீவிரம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான 819 ஏக்கர் நில அளவீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நில அளவீடு பணிகள்:
தமிழக முழுவதும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பாக கோவில் நிலங்களை கண்டறிந்து அவற்றை அளவீடு செய்து கல் உண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் தற்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான 819 ஏக்கர் நில அளவீடு பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறதோ இவை அளவிடப்பட்டு கல் ஊன்றப் பட்டுள்ளது.
குறிப்பாக இந்து கோவில்களில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை நவீன முறையில் அளவிட்டு ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால், அதனை அகற்றி விட்டு இந்து சமய நிலைய இந்து சமய அறநிலைத் துறைக்கு சொந்தமான கல்லை ஊன்றி அளவீடு செய்ய இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மூன்று பணியாளர்கள் நியமிக்க செய்யப்பட்டுள்ளார்கள். ஓராண்டாக நடைபெற்று வரும் இந்த பணியில் இதுவரை ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான 719 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.
சொந்தமான 1,500 ஏக்கர் ஏக்கர் நிலங்கள்:
இது குறித்து ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா அவர்கள் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அளவீடு செய்தல், நிலங்களை கண்டறிதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகிய பணிகள் சேட்டிலைட் ரோவர் இயந்திரம் உதவியுடன் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் உத்தரவின்படி இந்த மூன்று பணிகள் மிகக் கட்சிதமான முறையில் கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.கோயிலுக்கு நிலங்களுக்கு சொந்தமான 1,500 ஏக்கர் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றில் அளவீடு செய்து கல் ஊன்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இவை நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது வரை எண்ணூர் பத்தொன்பது ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamalar News