இங்கிலாந்துக்கு கடத்தப்பட்ட சிவபெருமானின் அரிய கல் சிலை மீண்டும் இந்தியாவை நோக்கி வருகிறது - 22 ஆண்டுகால முயற்சிக்கு கிடைத்த வெற்றி!

இங்கிலாந்துக்கு கடத்தப்பட்ட சிவபெருமானின் அரிய கல் சிலை மீண்டும் இந்தியாவை நோக்கி வருகிறது - 22 ஆண்டுகால முயற்சிக்கு கிடைத்த வெற்றி!

Update: 2020-07-30 06:32 GMT

ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ராஜஸ்தானில் உள்ள ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டு இங்கிலாந்துக்கு கடத்தப்பட்ட சிவபெருமானின் அரிய கல் சிலை இன்று இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்திற்கு (ஏ.எஸ்.ஐ) திருப்பி அனுப்பப்படுகிறது.

இந்த சிலை கிட்டத்தட்ட நான்கு அடி உயரத்தில், பிரதிஹாரா பாணியில் சிவபெருமானின் அரிய சித்தரிப்பு ஆகும். இது பிப்ரவரி 1998 இல் ராஜஸ்தானின் பரோலியில் உள்ள கட்டேஷ்வர் கோயிலில் இருந்து திருடப்பட்டது. 2003 ஆம் ஆண்டில், இந்த சிலை இங்கிலாந்துக்கு கடத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

இங்கிலாந்து அதிகாரிகள் தாமாக முன்வந்து சிலையை இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு திருப்பி அனுப்பினார்.

ஆகஸ்ட் 2017இல், ஏ.எஸ்.ஐ நிபுணர்களின் குழு இந்தியா மாளிகைக்குச் சென்று சிலையை பரிசோதித்தது. அப்போது கட்டேஷ்வர் கோயிலில் இருந்து திருடப்பட்ட அதே சிலை இது என்று நிபுணர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் அதை உலகுக்குக் காண்பிப்பதற்கும் இந்தியா இந்தியா எடுத்து வரும் முயற்சியின் விளைவாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பழம்பொருட்கள் மற்றும் சிலைகள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.


Similar News