உக்ரைனில் உயிர் தப்பிக்க இதுதான் வழி! இந்திய கொடியை கையில் ஏந்தி, 'பாரத் மாதா கி ஜெய்' என முழங்கும் பாகிஸ்தானிய மாணவர்கள்!
Stranded Pakistani students use Indian flag, chant 'Bharat Mata Ki Jai' slogans to escape Ukraine
பாகிஸ்தானை ஆளும் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம், உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களைக் கவனிக்கவில்லை என்று விமர்சித்து வரும் நிலையில், நெருக்கடி சூழலில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கொடியைப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உக்ரைனில் தேசியக் கொடியைக் காட்டினால், இந்தியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்தனர். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாகிஸ்தானியர்கள் இந்திய கொடியை காட்டி அங்கிருந்து தப்பித்தனர்.
பாகிஸ்தான் தொடர்பான செய்திகளை அதிகம் தெரிவிக்கும் ஹிந்துஸ்தான் ஸ்பெஷல் யூடியூப் சேனல் , பிப்ரவரி 27 அன்று ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது, அதில் ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், உக்ரைனில் உள்ள பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கொடியை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை வெளிப்படுத்தினார். உக்ரைன் நாட்டின் எல்லையை பாதுகாப்பாக சென்றடைந்து வேறு நாட்டிற்கு செல்ல, 'பாரத் மாதா கி ஜெய்' என முழக்கங்களை எழுப்பினர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் பேசிய போது, உக்ரைனில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் உறுதியளித்தார். மேலும், பிரதமர் மோடி உக்ரைன் எல்லையில் உள்ள நாடுகளின் தலைவர்களிடமும் பேசியிருந்தார், மேலும் இந்தியர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த நாடுகள் உறுதியளித்தன. அதன்படி, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பு கருதி வாகனங்களில் தேசியக் கொடியை ஏற்றிச் செல்லுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.