இந்தோனேஷியாவில் கடும் எரிமலை சீற்றம்:மக்கள் பீதியில் ஓட்டம் -சுனாமி எச்சரிக்கை!

இந்தோனேஷியாவில் கடும் எரிமலை சீற்றத்தால் மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

Update: 2024-04-19 14:58 GMT

எரிமலை ஒன்று ஐந்து மணிக்கு மேல் இந்தோனேஷியாவில் குமுறியதைத் தொடர்ந்து நேற்று ஆயிரக்கணக்கான மக்களை அதிகாரிகள் அவர்களின் இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றினார். எரிமலையின் கடும் சீற்றம் காரணமாக அருகில் இருந்த விமான நிலையம் மூடப்பட்டு கட்டிட சுவர்கள் விழக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எரிமலை புதன்கிழமை ஏற்கனவே நான்கு முறை குமுறியது. தொடர்ந்து இரவிலும் மின்னல் வெட்டுக்கு இடையே எரிமலை குழம்பு சிதறியது.

அதனைத் தொடர்ந்து எச்சரிக்கையை நான்கடுக்க நிலைக்கு அதிகாரிகள் உயர்த்தினர். அதுதான் ஆக அதிகமான எச்சரிக்கை நிலை இந்தோனேஷியாவின் எல்லை அருகே உள்ள வட்டாரத்தில் அமைந்துள்ள ஆழ்ந்த எரிமலையில் இருந்து வியாழக்கிழமை காலையில் புகை வெளியேறியது. அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது. அதனை தொடர்ந்து சுலவேசி தீவில் உள்ள மனாடோ நகர அனைத்துலக விமான நிலையம் 24 மணி நேரங்களுக்கு மூடப்பட்டது. அருகில் வசிக்கும் 11 ஆயிரம் குடியிருப்பாளர்கள் பீதியில் அவர்களாகவே வெளியேறி ஓடி விட்டதாக அதிகாரிகள் கூறினர்.

எரிமலை சீற்றத்தின் காரணமாகவும் சிறு சிறு கற்கள் விழுந்ததின் காரணமாகவும் நேற்று இரவு பலர் வெளியேறிவிட்டனர் என்று உள்ளூர் தேடி மீட்கும் முகவை ஒன்றின் அதிகாரியான ஜேன்ட்ரி பாயன்டோங் வியாழக்கிழமை அறிக்கை ஒன்றில் கூறினார்.கடலோரப் பகுதியில் இருந்த தமது முகவையின் 20 பணியாளர்கள் ரப்பர் படகுகளில் குடியிருப்பாளர்களை ஏற்றி அனுப்ப உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.


SOURCE :Dinaboomi

Similar News