'புளூடூத்' பயன்படுத்தி சுங்க தேர்வு எழுதிய மாணவர்கள்- போலீசார் அதிரடி விசாரணை!

சுங்க தேர்வை எழுதிய மாணவர்களில் சிலர் ப்ளூடூத் மற்றும் எலக்ட்ரானிக் டிவைஸ் வசதியை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-10-15 02:45 GMT

மத்திய அரசின் சுங்கத்துறையில் காலியாக உள்ள கேண்டின் உதவியாளர், கிளார்க் , சமையலர் ,எழுத்தர்,  கார் டிரைவர்கள் என பதினேழு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக சுங்கத்துறை இணையத்தில் முறையான அறிவிப்பு வெளியானது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,600 பேர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமையில் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.


தேர்வு தொடங்கிய 15 நிமிடத்தில் சுங்கத்துறை தேர்வு குழு அதிகாரிகளுக்கு திடீரென ஏற்பட்ட சந்தேகத்தால் தேர்வர்களை சோதனை செய்தனர். அப்போது சிலர் காதின் உட்புறமாக ப்ளூடூத் உடலில் எலக்ட்ரானிக் டிவைஸ் போன்ற சாதனங்களை பொறுத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் . இதை அடுத்து அதிரடியில் இறங்கிய சுங்கத்துறை தேர்வு முறை அதிகாரிகள் ஒவ்வொருவராக சோதனையிட்டனர்.


அதில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 28 பேரும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் என மொத்தம் 30 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை பொருத்துவது எப்படி தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு சுங்கத்துறை அலுவலக வளாகத்தில் இருந்து சிங்க் என்ற செயலி மூலம் இவர்களை தொடர்பு கொண்டு கேள்விக்கான பதில் அளித்தவர்கள் யார் என்பதை அறிய சுங்கத்துறை சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு 30 பேரையும் போலீசில் ஒப்படைத்தனர்.


இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் துணை கமிஷனர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இது போன்ற தேர்வு நடைபெறுவது பற்றி அப்பகுதியில் உள்ள காவல்துறை ஏன் தகவல் தெரிவிக்கவில்லை. முறையான சோதனைக்கு பின்னர் தேர்வு எழுதுபவர்களை அனுமதிக்காதது ஏன் என்பது போன்ற கேள்விகளை கேட்டு அதற்கு உண்டான விளக்கம் பெற்றனர். இது தொடர்பாக உதவி கமிஷனர் வீரக்குமார் தலைமையில் தனிப்பட்ட அமைக்கப்பட்டுள்ளது .அவர்கள் இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சற்று நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள். அதன் பிறகு இது பற்றி வழக்கு பதிவு செய்து பிடிபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


நடிகர் கமலஹாசன் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற திரைப்படத்தில் இதுபோல் ப்ளூடூத் பயன்படுத்தி தேர்வு எழுவது போல் காட்சி இடம்பெற்றிருக்கும். அதேபாணியில் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த நூதன முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இதுபோல் சென்னையை அடுத்த பரங்கி மலையில் நடைபெற்ற ராணுவ தெருவிலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இதே பாணியில் தேர்வு எழுதி நூறுக்கும் மேற்பட்டவர்கள் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


SOURCE :DAILY THANTHI

Similar News