மூன்று மாதங்களுக்குள் ஆர்.டி.ஐ இணையதளங்களை உருவாக்க வேண்டும் - அனைத்து ஐகோர்ட்டுகளுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

மூன்று மாதங்களுக்குள் ஆர்.டி. ஐ இணையதளங்களை உருவாக்க வேண்டும் என்று அனைத்து ஐகோர்ட்டுகளுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-03-21 13:15 GMT

ஐகோர்ட்டுகள், தகவல் அறியும் உரிமைச் சட்ட இணையதளங்களை உருவாக்க வேண்டும் என்று பிரவாசி லீகல் செல் என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த மனு தொடர்பாக 18 மாநிலங்கள் மட்டுமே பதிலளித்துள்ளதாகவும் சில ஐகோர்ட்டுகள் மட்டுமே ஆர்.டி.ஆர் இணையதளங்களை உருவாக்கியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதைப் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட், தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு 17 ஆண்டுகள் ஆகியும் ஐகோர்ட்டுகள் இன்னும் அதற்கான இணையதளங்களை தொடங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணையதளத்தை தொடங்கி விட்டதால் , மூன்று மாதங்களுக்குள் ஆர்.டி.ஐ இணையதளங்களை உருவாக்க அனைத்து கோர்ட்டுகளுக்கும் உத்தரவிட்டது.





 


Similar News