குஜராத்தில் ஒரே நேரத்தில் 108 இடங்களில் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் சாதனை !

குஜராத்தில் ஒரே நேரத்தில் 108 இடங்களில் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-02 04:45 GMT

புத்தாண்டு தினத்தன்று குஜராத் மாநிலத்தில் சூரிய நமஸ்காரம் செய்வதில் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 108 இடங்களில் சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அனைத்து இடங்களிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைவரும் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்தனர். அதிகமானோர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்தது என்ற வகையில் இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது.இதற்கிடையே இச்சாதனைக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார் .அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது :-


நமது கலாச்சாரமே நமது பெருமை. குஜராத்தை சேர்ந்த பெருமைக்குரிய ஆண்களும் பெண்களும் 108 இடங்களில் சூரிய நமஸ்காரம் செய்து 2024 ஆம் ஆண்டை வரவேற்றுள்ளனர். அதற்காக கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளனர். சூரிய நமஸ்காரம் நடத்தப்பட்ட மோதரா சூரிய கோவில் உள்ளிட்ட இடங்களை பார்த்து ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். தினந்தோறும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இந்நிகழ்ச்சி அடித்தளமாக அமையட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Similar News