தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத மாநகராட்சி: கவலையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவலம்!

தூய்மை பணியாளர்களுக்கு சம்பள நிலுவை இருப்பதன் காரணமாக கவலை உடன் நூற்றுக்கு மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் களமிறங்கி இருக்கிறார்கள்.

Update: 2023-03-17 08:48 GMT

மதுரை மாநகராட்சி நூறு வார்டு பகுதிகளை கொண்டது. இந்த பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக பத்தாவது வார்டு மற்றும் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருவதாகவும் சம்பளம் தராமல் புறக்கணித்து சுப்பிரமணியபுரத்தில் அவர்கள் தற்பொழுது போராட்டத்தில் களம் இறங்கி இருக்கிறார்கள்.


இதனால் அந்த பகுதிகளில் குப்பை அகற்றுதல், கழிவுநீர் அடைப்பு நீக்கும் போன்ற பல்வேறு பணிகள் ஒழுங்காக நடைபெறவில்லை. இதனை எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இன்னும் இரண்டு மாதங்களில் ஊதியம் வழங்கப்படும் என்று உத்திரவாதம் அளித்து இருக்கிறார்கள். 16 ஆண்டு காலமாக பணியில் இருந்து இறந்து போன கூலி தொழிலாளி குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.


வயது முதிர்வு காரணமாக பணி ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு பண பலன் உடனே உடனடியாக தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். மதுரை மாநகராட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் திடீரென பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டது காரணமாக ஈடுபட்டதன் காரணமாக அந்த பகுதிகளில் சற்று பரபரப்பு நிலவியது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News