முகம் தெரியிது விளையாடாதே ! ஆப்கான் பெண்களுக்கு தாலிபான்கள் கட்டளை !
Breaking News.
ஆப்கானில் மீண்டும் தாலிபான்களின் ஆட்சி அமைந்துள்ளதால் அங்கு பழமை வாதம் தலை தூக்கும் என மக்கள் அச்சப்பட்டு அங்கிருந்து வெளியியேறி வருகின்றனர். ஆனால் நாங்கள் முன்பு போல செயல்படமாட்டோம் என தாலிபான்கள் உறுதியளித்தனர்.
ஆனால், தாலிபான்களின் இயற்கை குணத்தை மாற்றவே இயலாது என மீண்டும் ஒரு முறை உலகிற்கு நிருப்பீத்துள்ளனர்.முதலில் தங்களின் போராளிகளுக்கு பெண்களுடன் பேச தெரியாது அதனால் அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறினர்.
அடுத்ததாக ஆண், பெண் படிக்கும் கல்வி நிலையங்களில் பல்வேறு கட்டுபாடுகள் விதித்தனர். தற்போது தாலிபான்களின் கவனம் விளையாட்டு துறையின் மீது திரும்பியுள்ளது. ஆம் பெண்கள் விளையாட கூடாது என தாலிபான்கள் கூறியுள்ளனர்.
வழக்கம் போல இதற்கும் காரணம் வைத்திருக்கின்றனர். அதாவது பெண்கள் விளையாட்டில் ஈடுப்பட்டால் அவர்கள் முகத்தை மறைக்க முடியாது மற்றும் ஊடகத்தினர் அவர்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பர் இதனால் அனுமதிக்க முடியாது என அதி மேதாவி தனமான காரணத்தை கூறியுள்ளனர்.
ஆப்கான் பெண்கள் மீது இன்னும் என்னென்ன கட்டுபாடுகள் மேதாவி காரணங்கள் கூறப் போகின்றனர் என்பதை தாலிபான்களை தவிர யாரும் அறிய போவதில்லை.