ஆப்கன்: தலிபான்களின் புதிய ஆட்சி, உலக நாடுகளை அச்சுறுத்துமா ?

ஆப்கானிஸ்தானில் தற்போது புதிய ஆட்சி அமைத்துள்ள தலிபான்கள் காரணமாக, உலக நாடுகள் தற்பொழுது அச்சத்தில் உள்ளார்கள்.

Update: 2021-09-04 13:51 GMT

தற்பொழுது ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியதை அடுத்து, அந்த நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. ஆப்கனில் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பை துவக்கியவர்களில் ஒருவரான முல்லா பராதர் தலைமையில் புதிய ஆட்சி அமைய உள்ளது. இது தொடர்பாக தலிபான் அமைப்பினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காபூலில் தலிபான் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அங்கு எந்த மாதிரியான ஆட்சி அமைக்கப்படும் என்பதை உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன. 


குறிப்பாக ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியவுடன், சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்குவைதா வெளியிட்ட அறிக்கையில் படி "உலகில் மற்றவர்க்கு ஆதிக்கத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளை மீட்பராக தலிபான்கள் இருப்பார்கள். மேலும் அத்தகைய நாடுகளை மீட்கும் மீட்கும் முயற்சியில் போர் நடத்தப்படும். ஜிகாத் எனப்படும் புனிதப் போர் நடத்த வேண்டும்" என கூறியிருந்தது. எனவே அவர்கள் குறிப்பிட்டிருந்த பகுதிகளில் நம் நாட்டின் ஜம்மு-காஷ்மீரும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  


இந்நிலையில் தலிபான் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் இதுபற்றி கூறுகையில், "உலக நாடுகளுக்கு நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால் முஸ்லிம்களை உங்கள் சொந்த மக்களாக கருதுங்கள். உங்கள் சட்டப்படி அனைத்தையும் பெற முஸ்லிம்களுக்கும் உரிமை உள்ளது. நாங்களும் முஸ்லிம் என்பதால் காஷ்மீர் உட்பட உலகளவில் முஸ்லிம்கள் எங்கு வசித்தாலும் அவர்களின் பிரச்னைக்கு ஆதரவாக குரல்கொடுப்போம். அதே சமயம் எந்த நாட்டிற்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தி போராட மாட்டோம்" என்றும் அவர் கூறியிருக்கிறார்.  

Input:https://indianexpress.com/article/world/afghanistan-kabul-taliban-government-formation-india-live-updates-7483596/

Image courtesy:indianexpress

 


Tags:    

Similar News