ஆப்கானிஸ்தான் உயர் கல்வி பெண்களுக்கு விதித்த தடை: இந்தியாவின் கருத்து என்ன?

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர் கல்வி பயில்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2022-12-24 03:14 GMT

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிப்பான்கள் பெண்கள் உயர்கல்விக்கு தடை விதித்து இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் படிக்க தடை விதித்து அறிவிப்பை ஒன்று வெளியிட்டு உள்ளார்கள். இனிமேல் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சென்று படிக்கக்கூடாது என்பது தொடர்பான தடை ஆப்கானிஸ்தானில் விதிக்கப் பட்டுள்ளது. இதை எதிர்த்து பல்வேறு நாடுகளில் இருந்து பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.


இது உலக நாடுகளில் கண்டனங்களை பெற்று வருகிறது, குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி என பல நாடுகளும் இந்த ஒரு செயலுக்கு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவும் இந்த விவகாரத்தில் தலையிட்டு கவலையை தெரிவித்து இருக்கிறது. இது பற்றி வெளியுறவு செய்தி தொடர்பாளர் கூறுகையில், இது தொடர்பான அறிக்கையை நாங்கள் கவலையுடன் கவனத்தில் கொண்டுள்ளோம்.


ஆப்கானிஸ்தான் பெண்கள் கல்விக்கான காரணத்தை இந்தியா தொடர்ந்து ஆதரத்து வருகிறது என்றார். உயர் கல்விக்கான அணுகுதல் உட்பட அனைத்து ஆப்கானிஸ்தான்களின் உரிமைகளை மதிக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சம உரிமைகளை உறுதிப்படுத்தும் மற்றும் அனைவரையும் உள்ளடக்கியும் மற்றும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிறுவுவதன் முக்கியத்துவதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News