பள்ளி செல்ல சிறுமிகளுக்கு தடை! தட்டி கேட்டவர்கள் மீது தாலிபான்கள் துப்பாக்கி சூடு!

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக மக்களாட்சி நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முடிவுற்றது.

Update: 2021-09-30 09:48 GMT

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக மக்களாட்சி நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முடிவுற்றது.

அங்கு துப்பாக்கியும், வெடிகுண்டுமாக திரியும் தாலிபான்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். மேலும், இடைக்கால அரசையும் நிர்வகித்து வருகின்றனர். இதற்கு நாட்டில் பல்வேறு இடங்களில் தினமும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதே போன்று இந்த மாத தொடக்கத்தில் பள்ளிகளுக்கு செல்வதற்கு சிறுமிகளுக்கு தாலிபான்கள் தடை விதித்தனர். இதனிடையே மீண்டும் படிப்பதற்கு அனுமதி வழங்கக்கோரி கிழக்கு காபூலில் உள்ள உயர் நிலை பள்ளிக்கு வெளியில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே அவர்கள் மீது தாலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் போராட்டம் நடத்திய பெண்கள் பள்ளிக்கு சென்று அடைகலம் புகுந்தனர்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News