பொது இடங்களில் பெண்கள் முழு புர்கா அணிய வேண்டும் - தலிபான் புதிய உத்தரவு!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த பின்னர் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆடை விஷயங்களில்தான் அதிகமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதன்படி இனி ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண்கள், பொது வெளியில் உடலை காண்பிக்கும்படி செல்லக்கூடாது. அதற்கு பதிலாக உடல் முழுவதும் மறைத்திருக்கும் வகையில் புர்காவை அணிவது கட்டாயம் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இது குறித்து தலிபானின் உச்ச தலைவர் ஹிபாதுல்லா அகுன்ட்ஸ்சடா என்பவர் கூறியதாவது: பெண்கள் தலை முதல் பாதம் வரை மறைத்திருக்கும் வகையில் புர்காவை அணிந்திருக்க வேண்டும். எனவே அதுதான் பாரம்பரியம் ஆகும். ஷரியா சட்டத்தின்படி முதுமை அடையாத பெண்கள் கண்களைத் தவிர அனைத்து பாகங்களையும் மறைக்கின்ற வகையில் புர்கா அணிந்திருக்க வேண்டும். இதனால் ஆண்களின் அத்து மீறலில் இருந்து தப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: News 18 Tamilnadu