ஆப்கானிஸ்தானை பெண்கள் கல்வி கற்கும் தடையை நீக்க வேண்டும்: ஐ.நா வேண்டுகோள்!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கான தடையை நீக்க வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்துகிறது.

Update: 2023-01-28 05:42 GMT

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கான தடையை தலிப்பான்கள் ஏற்கனவே பிடித்து இருந்தார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தங்களுடைய ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர்கள் கல்லூரிகளில் பயிலும் பொழுது இருபாலர் கல்லூரிகளில் பயில்வதற்கு தடை, மேலும் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதற்காக தடை போன்ற பல்வேறு தடைகளை அங்குள்ள பெண்களுக்கு விதித்து வருகிறார்கள்.


அந்த தடைகளை எதிர்த்து உலகம் எங்கும் தற்போது குரல்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் ஐக்கிய நாட்டு சபை இந்த தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில் சுமார் 80 சதவீத சிறுமிகளுக்கு கல்வி தற்போது மறுக்கப்பட்டுள்ளதாகவும் யுனெஸ்கோ தன்னுடைய ஆராய்ச்சியில் தெரிவித்து இருக்கிறது. 80 சதவீத குழந்தைகள் என்றால் வருங்காலத்தில் ஒரு புதிய தலைமுறை கல்வி கற்காத ஒரு சூழ்நிலையில் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.


எனவே அந்நாட்டில் உள்ள ஆட்சியாளர்கள் ஆன தலிபான்கள் ஐநா சபையை கூறிய ஆலோசனை கேட்க வேண்டும் என்று தலைவர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. பொதுச் செயலாளர் இதைப் பற்றி கூறுகையில் கல்வி பயில பல்வேறு வாய்ப்புகள் பெண்களுக்கு அங்கு மறுக்கப்பட்டு வருகிறது. இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்விகளை கற்பதற்கான தடைகளை அங்கு தளர்த்த வேண்டும் மற்றும் அந்த தடைகளை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் பல்வேறு தரப்பிலிருந்து தற்போது வரப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy:Maalaimalar

Tags:    

Similar News